Translate

Saturday, July 28, 2012

உடல் எடையை குறைக்க சுலபமான சில வழிகள் உங்கள் வீட்டிலேயே இருக்கு.


இந்த காலத்தில் உடல் எடை அதிகமாக இருந்து, அதற்காக பல டயட்களை மேற்கொண்டு இருப்போர் நிறைய பேர் இருக்கின்றனர். அதிலும் சிலர் ஒரு நாளில் பாதியை ஜிம்மிலேயே செலவழிக்கின்றனர். அவ்வாறெல்லாம் கஷ்டப்பட்டு, எனர்ஜி மற்றும் நேரத்தை வீணடிக்காமல், உடல் எடையை குறைப்பதை விட, வீட்டிலேயே ஈஸியாக ஒரு சில பானங்களை செய்து தினமும் குடித்து வந்தால், உடல் எடையானது எளிதில் குறைவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். அத்தகைய எளிமையான வீட்டு பானங்கள் என்னென்னவென்றும், எப்படி சாப்பிட வேண்டும் மற்றும் என்ன பலன் அதில் இருக்கிறதென்றும் மருத்துவர்கள் பட்டியலிட்டு கூறியுள்ளனர்.
கிரீன் டீ: அனைவருக்கும் கிரீன் டீ-யை பற்றி தெரிந்திருக்கும். இது உடலுக்கு, சருமத்திற்கு மற்றும் கூந்தலுக்கு ஆரோக்கியத்தை தரும். அத்தகைய கிரீன் டீ-யை, அதன் இலைகளால் அல்லது கடைகளில் விற்கும் டீ பைகளை வாங்கி, வீட்டில் தயாரிப்போம். கிரீன் டீ சாப்பிட்டால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, எளிதில் எடையானது குறைந்துவிடும். அதிலும் அந்த கிரீன் டீ-யின் இலையை இரவில் படுக்கும் முன் நீரில் போட்டு, சிறிது எலுமிச்சை பழச்சாற்றை விட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். ஏனெனில் எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் கிரீன் டீ இலையில் இருக்கும் அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட் நீரில் இறங்கி, அதனை நாம் பருகினால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, எடையும் குறைந்துவிடும். மேலும் அந்த கிரீன் டீ உடலில் இருக்கும் மெட்டபாலிசத்தின் அளவை அதிகரித்து, அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும். அதிலும் கிரீன் டீ குடித்தால், 2-4 மணிநேரம் பசியானது ஏற்படாமல் நன்கு கட்டுப்படும்.
சிட்ரஸ் ஜூஸ்: ஜூஸ் என்றால் பிடிக்காதவர்கள் இருக்கமாட்டார்கள். அத்தகைய ஜூஸில் சிட்ரஸ் இருக்கும் ஜூஸ்களை பருகினால், உடல் எடையானது குறைந்துவிடும். ஏனெனில் சிட்ரஸ் பழங்களில் இருக்கும் அமிலங்கள், உடல் கொழுப்புகளை கரைத்துவிடும். மேலும் உடலில் இருக்கும் கலோரிகளையும் கரைத்துவிடும். அத்தகைய சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, பெர்ரி போன்றவை மிகவும் சிறந்தது. திராட்சை பழங்களிலும் ஜூஸ் செய்து குடித்தால் உடல் எடையானது குறைவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் திராட்சை பழங்களில் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் போன்றவை அதிகமாக உள்ளது. மேலும் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் குறைவாக உள்ளது. ஆகவே அதன் தினமும் ஒரு டம்ளர் பருகினால் உடல் எடை விரைவில் குறைந்துவிடும். முக்கியமாக எலுமிச்சை பழ ஜூஸ் சாப்பிடும் போது, அதில் சர்க்கரை சேர்க்காமல் குடிக்க வேண்டும். ஏனெனில் சர்க்கரையே உடலில் கொழுப்புகளை அதிகப்படுத்துகிறது. ஆகவே அப்போது அந்த ஜூஸ் உடன் உப்பை சேர்த்து குடிக்கலாம். வேண்டுமென்றால் சுடு தண்ணீரில் கூட கலந்து குடிக்கலாம்.
ஆப்பிள் வினிகர் : குளிர்ந்த தண்ணீரில் தேன் மற்றும் ஆப்பிள் வினிகரை கலந்து குடித்தால், எடை விரைவில் குறையும். மேலும் இது செரிமானத்தை அதிகப்படுத்துவதோடு, உடலில் இருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றுகிறது. ஆகவே எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு டம்ளர் இந்த ஆப்பிள் வினிகரை நீரில் கலந்து குடிக்க வேண்டும். இதனால் அளவுக்கு அதிகமாக உணவை உண்ணாமல் அது தடுக்கும். அதிலும் இதனை தினமும் இருமுறை குடித்தால் நல்லது.
காபி: இது மற்றொரு எடையை குறைக்கும் பானம். காப்ஃபைன் ஒரு ஆல்கலாய்டு. ஆகவே காப்ஃபைன் கலந்திருக்கும் காபியை அளவோடு குடித்தால், உடல் எடையை குறைப்பதற்கு சிறந்த பானமாக இருக்கும். மேலும் கொக்கோ, காபி மற்றும் டீ போன்றவையும் காப்ஃபைன் இருக்கும் பொருட்களே. அதிலும் இந்த பொருட்களை ஒரு நாளைக்கு ஒரு கப் குடித்தால் உடல் எடை குறையும், அதற்கு அதிகமாக குடித்தால் தூக்கமின்மை, உடலில் வெப்பம் அதிகமாதல் போன்றவை ஏற்படக்கூடும்.
எனவே, மேற்கூறிய பானங்களை குடித்து உடல் எடையை ஈஸியாக குறைத்து, அழகாக, பிட்டாக இருப்பதோடு, ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.

No comments:

Post a Comment